கண்கள் என்பது ஒரு பொக்கிஷம். கண் பார்வை என்பது வரப்பிரசாதம். இதை இழந்தபிறகுதான் பலர் அதன் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்கின்றனர். அதுவரைக்கும் அவர்களுக்கு கண்களின் முக்கியத்துவம் தெரியவில்லை. எப்போதும் கண்களின் எந்த பாதிப்பாக இருந்தாலும் ஆரம்பகட்டத்தில் குணப்படுத்திக்கொள்வதே மிகவும் நல்லது. அதை அதிகப் படுத்திக்கொண்டு கடைசிக் கட்டத்தில் வராமல் வரும் முன் காப்போம் என சொல்வதைப்போல் நோய் வரும் முன்காப்பதே நல்லது. ஒருவர் முழுமையாய் வாழ தலை முதல் கால்வரை மிகவும் முக்கியம். கண்கள் மிகவும் முக்கியம். மின்வெட்டு சமயங்களில் மெழுகுவர்த்தியையோ, தீப்பெட்டியையோ தேடும்போது எவ்வளவு சிரமப்படுகிறோம் என்பது நமக்கு தெரியும். கண் பார்வை இழந்தவர்களுக்கு வாழ்நாள் முழுக்க இப்படி இருக்க நேர்வது கொடுமை. அதுமாதிரி யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகத்தான் கண் பாதிப்பு, பிரச்சினைகள் பற்றி பேசவேண்டும்.

கண்கள் கசக்குதல், கண் எரிச்சல், உறுத்தல், கண் சிவந்துபோதல், கண்ணைத் தேய்க்கத்தோன்றுதல் எல்லாம் இந்தக் காலத்தில் ரொம்ப முக்கிய பிரச்சினைகளா எடுத்துக்கலாம். இவை பெரிய பிரச்சினைகள் இல்லை என்றால் கூட இவற்றை வளர விட்டால் பெரிய பிரச்சினையாக வாய்ப்பிருக்கிறது. முக்கியமா கண்களுக்கு அல்ர்ஜிங்கிறது உள்ளிருந்து அலர்ஜி, இல்லையென்றால் வெளியே காற்றிலிருந்து அல்ர்ஜியா இருக்கலாம். இல்லைன்னா நவீன உலகில் அதிகமா கம்ப்யூட்டர் உபயோகிப்பதால் ஏற்படுகிறது.
நீரழிவு நோய், ப்ளட் பிரஷர் மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு, ஹைபர் டென்ஷன் டயபடீஸ் ஆகியவை உள்ளவர்களுக்கு கண்பார்வை இழந்துபோகும் அளவில் மோசமான பிரச்சினைகள் வரலாம். கண் பார்வை இழந்து இரத்தக் கசிவு ஏற்பட்டு சிரமப்படுகிறார்கள்.
டயபடீஸால் பாதிக்கப்படுவது கண், இதயம், கைகால்கள், நரம்பு,மூளை, கிட்னி என பாதிக்கப்படலாம். ப்ளட் சுகர் லெவல் அதிகமாக இருக்கும்போது கண்களில் நீர் கோர்க்கலாம். இரத்த கசிவு ஏற்படலாம், இரத்த கசிவு வழிய ஆரம்பிக்கலாம். இது பார்வைக்கு ஏற்படும் மிகக் கடுமையான ஆரம்ப கட்டத்தில் பார்த்தால் லேசர் முறையில் குணப்படுத்த முடியும். கண் இரத்த கசிவு எனும்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எந்த அளவுக்கு பார்வை வரும் என்பது கஷ்டமான விஷயம். ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்த வேண்டும். இன்பெக்ஷன் அலர்ஜி, கண்புரை ஆகியவை வரலாம்.

பிறந்த குழந்தை, நடுத்தர வயதினர், முதியவர் எந்த வயதினருக்கும் வரலாம். முக்கியமா 55 லிருந்து 66 வயது வரை காமனாக அனைவருக்கும் வரும்.
ஒன்று வயது காரணம். வயதானவர்களுக்கு எப்படி முடி நரைத்தல், தோல் சுருங்குதல் போல் கண்ணுக்கும் வயதாகிறது லென்சுக்கும் வயதாகிறது. இரண்டாவது காரணம் லூஸ் மோஷன் குழந்தைகளுக்கு பேதி என்று டீ ஹைட்ரேஷன் மூலமா வரலாம்.

வயதானால் கண்டிப்பாக வரும். முன்னேற்பாடாக ஏதும் செய்ய இயலாது. சீக்கிரம் வராமல் தள்ளி வைக்க நல்ல ஆகாரங்கள் முக்கியம். நல்ல காய்கறிகள் பழங்கள் சேர்க்கணும். நவீன உலகில் பாஸ்ட் புட் அதிகமாக சாப்பிடறாங்க.
சூரிய ஒளியில் போகும்போது கண்ணாடி அணியலாம். குடை எடுத்துப் போகலாம். தொப்பி அணியலாம். சூரிய ஒளி நேரே கண்ணுக்குள் படாமல், அல்ட்ரா வயலட் கதிர்கள் அதிக நேரம் கண்ணில் பட்டால் இது ஏற்படும். சிலர் பல வருடங்களாக கெமிக்கல் பேக்டரி, புகை சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்களுக்கு வயதுக்கு முன்னாலேயே ஏற்பட வாய்ப்பு உள்ளது
கண்புரைக்கு நல்ல சிகிச்சை இருக்கு . முன்பு கேடராக்ட் ஆபரெஷன் என்றால் தையல் போட்டு பெரிய அறுவை சிகிச்சை செய்யணும். இன்னிக்கு அல்மோஸ்ட் வாக் இன் வாக் அவுட் தான். எல்லா டெஸ்ட்டும் முடித்துவிட்டு காலையில் ஹாஸ்பிடலுக்கு வந்தால் ஆபரேஷன் முடித்துவிட்டு மதியம் வீட்டுக்குப் போய்விடலாம். நவீன உலகில் இவ்வளவு எளிதாக செய்துவிடலாம். சிறிய துவாரத்தின் மூலமாக பெரிய புரையை உடைத்து லேசர் கருவி மூலமா உறுஞ்சி எடுத்துவிட்டு அதே லேசர் கருவி மூலமா கண்ணில் லென்சைப் பொருத்தி விடலாம். கண் பார்வை நன்றாகத்தெரியும். நல்ல பவர்புல் லென்ஸ்கள் இப்போது வந்திருக்கின்றன. தூரப்பார்வை, கிட்டப்பார்வை, நடு பார்வை திருத்துகிற அளவுக்கு லென்ஸ்கள் இருக்கின்றன.

கண்புரை கண்விழி பாதிப்புகள் சூட்டால் கருவிழியின் மேலே இருக்கும் தோல் எரிச்சல், வலி, சிவத்தல் ஏற்படும். பிரத்தியேக மூக்குக்கண்ணாடி போட்டும், ஷீல்ட் வைத்து மறைத்தும் தவிர்க்கலாம்.

பேஷண்ட்டுக்கு ஆரம்பத்தில் க்ளக்கோமா இருப்பது தெரியாது. நோய் முற்றிய பின்பு பைனல் ஸ்டேஜில்தான் தெரியும். இரத்த அழுத்தம் போல் கண்ணீர் அழுத்தம் intra aracular pressure. அதிகமாகும் போது மூளையிலிருந்து கண்ணுக்கு வரும் ஆப்டிகல் நரம்பு பாதிக்கப்படுவதால் கிளக்கோமா வரும். எட்டிலிருந்து பதினெட்டு வரை நார்மல். 20 வரை பார்டர் லைன். இருபதைத் தாண்டும்போது பிரஷர் கூடும். உள் கண்ணிலிருந்து வெளிக்கண்ணிற்கு வரும்போது 360 டிகிரி சுத்தி வரும் பாதையில் அடைப்பு இருந்து உள்ளிருந்து வெளியே வரமுடியாமல் பிரஷர் அதிகமாகி க்ளோஸ்ட் ஆங்கிள் க்ளக்கோமா. கோணம் சுத்தமாக இருந்தால் கூட கண்ணில் அழுத்தம் இருக்கும்.
கண்ணில் அடிபட்டால் கூட அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. லேசர் மூலமாக சரிசெய்யலாம். அறுவை சிகிச்சை கிடையாது. Out patient procedure. சிகிச்சை செய்துவிட்டு உடனே வீட்டுக்குப் போய் விடலாம். சொட்டு மருந்தாலும் குணப்படுத்தலாம். கடினநீர் குடிப்பதால் கிளக்கோமா வருவது என்பது முற்றிலும் தவறான கருத்து. குடிக்கும் நீரினாலோ உண்ணும் உணவகையோ கண் அழுத்தம் வர எந்த சம்பந்தமும் கிடையாது.

எந்த அளவு நரம்பு பாதிக்கப்பட்டிருக்கிறதோ அதைப் பொறுத்தது. நரம்பு அதிகமாக பாதித்திருந்தால் இழந்த பார்வை கிடைக்காது. மேற்கொண்டு பாதிக்காமல் இருக்க சிகிச்சை அளிக்கலாம். நேர்பார்வை நன்றாக இருக்கும். கடவுள் கொடுத்த field of vision கடைசி வரை நன்றாக இருக்கணும். சுற்றளவு பார்வைதான் குறைந்து கொண்டே வரும். ஒரு கட்டத்தில் டியூப் வழியாகப் பார்ப்பது மாதிரி கூட ஏற்படும். அப்போது பார்வை சுத்தமா சுருங்கி மொத்தமாகப் பார்வை போய்விடலாம். இழந்த பார்வையை மொத்தமாகக் கொண்டுவருவது இயலாது.

micro incision fako emulcification cataract surgery. fako lazer surgery. kurefractive error கண்ணாடி பிரச்சினை, சரியான உணவு சாப்பிடாமல் இருப்பது. hyparopia கண் அளவு சிறியதாக இருக்கும். வளர்ச்சி இருக்காது கண் கருவிழி கண் வடிவமைப்பு ஆகிய காரணங்களால் குழந்தைகளுக்கு கண்களில் பிரச்சினைகள் வரலாம்.
தூரப்பார்வை, கண்ணாடி கொடுத்து சரி செய்ய வேண்டும். கிட்டப் பார்வைக்கும் கண்ணாடி கொடுத்தால் சரியாகும். பிறப்பில் ஏற்படும் பாதிப்பு. டிவி அதிக அளவில் பார்ப்பது, கிட்ட போய் பார்ப்பது காரணம், கலர் கலராக இருப்பதால் கிட்ட போய் பார்க்கணுமென்ற ஆர்வம் குழந்தைகளுக்கு இருக்கும்.
கண் சரியாகத் தெரியவில்லை என்றாலும் கிட்ட போய் பார்ப்பார்கள்
நவீன உலகில் கப்யூட்டர் உபயோகம் அதிக மென்பதால் சரியான முறையில் உபயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
கம்ப்யூடர் கேம், எண்டெர்டெயிண்மெண்ட் கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. இப்போது செல்லிலும் விளையாடுவது அதிகமாகி விட்டது. இவையெல்லாம் கண்களுக்கு தீங்கான விஷயங்கள். மொபைல் வீடியோ கம்ப்யூடர் கேம் அனுமதிக்கவே கூடாது. தீமை என்று எடுத்து சொல்லணும். பால். பழங்கள், முட்டை, மீன் போன்றவற்றை கொடுத்தால் கண்பார்வை நன்றாக இருக்கும்.

டிவி கண்டிப்பா அட்லீஸ்ட் 5 அடி தூரத்தில் வைக்கணும்
குழந்தைகள் படிக்கும்போது 15 இஞ்ச் தூரத்தில் புத்தகத்தை வைத்து கையில் மடியில் வைக்காமல் டெஸ்க்கில் வைத்து படித்தால் நல்லது. அருகிலும் இல்லாமல் தூரத்திலும் இல்லாமல் சரியான தொலைவில் வைத்து வாசிக்கிறது நல்லது.

ஒளி மிகவும் அவசியம். கண் கூசும்படி பிரகாசமாகவோ, டிம்மாகவோ மங்கிய ஒளியாகவோ இல்லாமல் சரியான ஒளியில் படிக்க வேண்டும். பெரியவர்கள் சாப்பிட்ட உணவு அவங்களுக்கு பயன் அளித்தது.

பல வருஷமா இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. பல வருஷங்களா என்னைப் போன்ற கண் மருத்துவர்கள் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இன்னிக்கு வரைக்கும் இதுக்கு தீர்வு கண்டது மாதிரி எனக்குத் தெரியவில்லை.
இன்னிக்கும் பயணம் செய்யும்போது புத்தகம் வாசிப்பவர்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். பயணத்தில் புத்தகங்கள் படிப்பது கண்டிப்பா தவறு. பயணம் செய்யும் போது ஒரு பக்கம் படித்தால் தவறில்லை. முழு புத்தகமும் படிப்பது தவறு. படுத்துக்கொண்டு புத்தகம் படிப்பது மிகவும் தவறு. சிலர் படுத்துக்கொண்டு டிவி பார்ப்பார்கள். படுத்துக்கொண்டு டிவி பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும். கண்களுக்கு ஸ்ட்ரெய்ன் அதிகம் உண்டாக்கும். கொஞ்ச தூரத்தில் நன்றாக உட்கார்ந்துகொண்டு பார்த்தால் நல்லது.

இன்னும் இந்தப் பழக்கம் கிராமப் புறங்களில் இருக்கிறது. பெரியவங்க நமக்கு சில நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறாங்க. பாட்டி வைத்தியம் என்பது அன்றைய காலத்தில் பிரபலம். ஒத்துக்கணும். சில நல்ல விஷயங்கள் இருக்கு. ஆனா மருத்துவர்களைப் பொருத்த அளவில் இது பதிப்பு தரக்கூடியது. இந்த பழக்கம் நகர்ப்புறங்களில் இல்லை. கிராமப்புறங்களில் இருக்கிறது. விளக்கெண்ணெய் மட்டுமல்ல எந்த எண்ணையையும் கண்களில் விடுவது நல்லது இல்லை. அலர்ஜி பாதிப்பு ஏற்படலாம். கண்களை தேய்த்தல். உருட்டுதல் எதுவுமே அந்த இளம்பருவத்தில் நல்லதல்ல.

பெரியவங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. தாய்ப்பால் குழந்தைகளுக்கு குடிக்கச் சிறந்தது. நல்ல விஷயம். இதில் இருக்கும் ஒவ்வொரு சத்தும் ஆண்ட்டி பயாடிக் நிறைந்தது. ஆனால் குழந்தைகளுக்கு கண்ணில் தாய்ப்பால் விட்டால் சிலருக்கு சரியாகலாம் காட்ஸ் க்ரேஸ். சிலருக்கு சரியாகாது. கண்ணில்அலர்ஜி, இன்பெக்ஷன், அததற்கான மருந்து இருக்கிறது. கண் மருந்தை விடுங்கள். கண்ணீர் சுரந்து அழுக்கை எடுத்துவிடும்.

கண்களில் கண்ணீர் சுரக்க lactrinal glands இருக்கு. கண்ணீர் சுரந்து தானா வழிஞ்சு கண்ணுக்கு கீழே லோயர் லிட் வழியாக மூக்குக்கும் வாய்க்கும் போகும்.
சுரப்பியின் பிரச்சினைகளால்
1. கண்ணீர் சுரப்பியில் நீர் உற்பத்தி குறைதல்
2. கண் நீர்ப்பையில் அடைப்பு ஏற்பட்டால், சுரப்பி வளர்ச்சி பிரச்சினைகளால், கண்ணீர் உற்பத்தி ஆனாலும் தங்காமல் இருக்கும் பிரச்சினை.
3. கண் நீர் உற்பத்தி இருக்கும். கண்களில் தங்கும். ஆனால் வழியல. கண்ணில் நிற்க வேண்டிய கண்ணீர் நிற்கிறதில்லை.
நவீன உலகில் கம்ப்யூட்டரை தொடர்ந்து விடாமல் பார்த்தல், அதிகமா படித்தல், இவையும் காரணம். கண்களை சிமிட்ட வேண்டும். சிமிட்டல் குறைந்தால் நீர் கண்ணில் பரவாது. கருவிழியில் கண்ணீர் படரணும். இது இல்லாமல் இருந்தால் Dry eye syndrome என்று இதைச் சொல்கிறோம்.
இயற்கையாக கண்ணீர் உற்பத்தி ஆகாத போது artificial tears உபயோகிக்க வேண்டியதிருக்கிறது. நல்ல ஐ டிராப்ஸ் போடவேண்டி இருக்கிறது.
டிவி பார்க்கும்போதோ, கம்ப்யூட்டர் உபயோகிக்கும்போதோ, தொடர்ந்து புத்தகம் வாசிக்கும்போதோ இடை இடையே கண்களைச் சிமிட்ட வேண்டும். சப்ஸ்டிடூட்டா இந்த டிராப்ஸ் உபயோகிக்கலாம்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிகமாகச் செய்கிறோம். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 25 லிருந்து செப்டம்பர் 8 வரை இயற்கை கண் தானம் ப்ரோக்ராம் செய்கிறோம். எல்லா மீடியாக்களிலும் டிவி, ரேடியோ, நாளிதழ்கள், பத்திரிகைகள் என்றும், பள்ளி, கல்லூரிகள், கம்பெனிகள், எங்கும் செய்கிறோம்.
கண் தானம் ஒரு மித் ஆக சிலருக்கு பயத்தை கொடுக்கிறது. அச்சம் இருக்கிறது. அந்த பயத்தை நாங்கள் போக்குகிறோம். கண் மண்ணுக்குள் போவதால் என்ன பயன் என்று எடுத்துச் சொல்கிறோம். கண்தான விழிப்புணர்வு குறித்து சிறு குழந்தைகளுக்கு பெயிண்ட்டிங் காம்பெடிஷன் நடத்தறோம். தீம் அந்த வயதில் கொடுப்பதால் அவங்களுக்கு சின்ன வயதிலேயே விழிப்புணர்வு வருகிறது.
கண் தானம் குறித்த பல மூடநம்பிக்கைகளை போக்குகிறோம்.
கண் தானம் எப்போது செய்யணும், யாருக்கு இன்பர்ம் செய்யணும், என்பதை எடுத்துச் சொல்கிறோம். சிலருக்கு கண் தானம் செய்வதால் மறுபிறவி எடுக்க முடியாது என்ற கவலை. கண்களை தானமாகக் கொடுத்துவிட்டால் அடுத்த பிறவியில் கண் பார்வை இல்லாதவர்களாகப் பிறப்போம் என்னும் கவலை. மறுபிறவி இருக்கிறதா இல்லையான்னு எனக்குத் தெரியாது.
கண்களை புதைப்பதாலோ எரிப்பதாலோ கண் என்பது மண்ணுக்கோ தீக்கோ போகிற வேஸ்ட் ஆகிறது. கண் தானம் செய்யும் போது மிக உன்னதமான விஷயம். இரண்டு பேர் உலகத்தில் ஏதோ ஒரு இடத்தில் நம் கண்களால் வாழ்கிறாங்க. பார்க்கிறாங்க. இந்த உலகத்தை ரசிக்கிறாங்க. வண்ணத்தை ரசிக்கிறது பூவை ரசிக்கிறது புல்வெளி, உடை, ஆகாரம் என்று பலவற்றையும் பார்க்கிறாங்க. கண் பார்வை இல்லாதவர்களுக்குக் கொடுக்கிறது பெரிய விஷயம். Such a wonderful noble cause. இதுக்கு கண்டிப்பா விழிப்புணர்வு வேணும். ஒருவர் இறந்தால் அவருக்கு மிகவும் நெருக்கமான உறவினர்கள் கண்களை எடுக்க சம்மதம் தரணும். இறந்த பிறகு உறவினர்கள் கையொப்பமிட்டு சம்மாதம் தெரிவிச்சு கண்டிப்பா ஒத்துழைத்து கையொப்பமிட்டு கொடுக்கணும்.
நிறைய பேர் இப்போ முன்வந்து செய்யறாங்க. சில காரணங்களால் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க. வற்புறுத்தாமல் அவங்களே விரும்பி புனித காரியம் செய்வதாய் நினைத்து கண்தானம் செய்தால் மிகவும் நல்லது.
இறந்தவர்களின் க்ண்களை தானம் செய்ய நினைப்பவர்கள் முதலில் மேலே பேன் சுற்றிக்கொண்டிருந்தால் அதை நிறுத்தணும். கண் உலராமல் காக்கணும். கண்ணில் ஈரப்பதம் இருந்தால் தான் சரியான வழியில் உபயோகிக்க முடியும். சுத்தமான கைக்குட்டை அல்லது ஏதேனும் துணியை நீரில் நனைத்து ஈரமாக கண்ணின் மேல் வைக்க வேண்டும். கண் மருத்துவமனையிலிருந்து அல்லது கண் வங்கியிலிருந்து கண்களை எடுக்க வரும் வரையில் ஈரப்பதம் இருக்க வேண்டியது முக்கியம்.

கண்டிப்பா. நல்ல கேள்வி. இதை நானே சொல்லியிருந்திருக்கணும். கண் புரை அறுவை சிகிச்சை செய்தவங்களோ, கிளக்கோமா இருந்தவங்களோ, சுகர் பிரஷரினால் ரெடினல் சிகிச்சை செய்தவ்ர்களோ எது செய்திருந்தாலும் கண்களை தானமாகத் தரலாம். ஏன்னா, கண்களை நாம் எடுத்தால் கூட கண் பார்வை இழந்தவங்களுக்கு நாம பொருத்தப் போவது கருவிழியைத்தான். இது கருவிழி மாற்று சிகிச்சை. கார்னியல் டிரான்ஸ்ப்ளேண்ட் சர்ஜரி. மற்ற பிரச்சினை இருக்கிறவங்களுக்கும் கண்தானம் செய்யலாம்.

கொயட் ரேர் கண்டிஷனில் இது மாதிரி நடக்கலாம். கடவுளின் படைப்பில் கண்களின் படைப்பே பெரிய விஷயம். ஒருவரின் கருவிழியை இன்னொருவருக்கு பொருத்தலாம். அது சரியாகப் பொருந்தும். இரத்த தானத்திலாவது இந்த குரூப் இரத்தம் இருக்கிறவங்களுக்கு அதே குரூப் இரத்தம் தானம் கொடுக்க முடியும். கண்களைப் பொருத்தவரையில் மகத்தான விஷயம் என்னன்னா பெரியவங்க கண், சின்னவங்க கண் என்ற பாகுபாடு இல்லாமல் யாருடைய கருவிழியையும் யாருக்கு வேண்டுமானாலும் வயது வித்தியாசமின்றி பொருத்தலாம். ரொம்ப சின்ன குழந்தைங்க இல்லைன்னா ரொம்ப வயது முதிர்ந்தவங்களுடையது மட்டுமே சில விஷயங்களுக்கு பொருந்தாது. காமனா பாத்தீங்கன்னா எல்லோருடையதும் எல்லோருக்கும் பொருந்தும். ஈஸியா இருக்கும்.
ரேர் கண்டிஷன்ல ஒருவருடைய கருவிழி இன்னொருத்தருக்கு ஒத்துக்காம ஏத்துக்காம இருக்கும். கிராப்ட் ரிஜக்ஷன் நு சொல்வோம். அந்த மாதிரி சமயங்கள்ல இரண்டாவது கருவிழி அறுவை சிகிச்சை செய்கிறோம். அப்போ செட்டாக வாய்ப்பிருக்கு.

தலை முதல் கால் வரை எதுக்கும் நோய் வந்த பிறகுதான் மருத்துவரிடம் வராங்க. வருமுன் காப்போம்ங்கிறது ரொம்ப முக்கியம். முதலில் பேசிக்கா இந்த மாதிரி வியாதிகள் வரும்னு முதலில் தெரிஞ்சுக்கணும். பிறகு அதை வருவதற்கு முன்னே எப்படி காக்கணுமுன்னு தெரிஞ்சுக்கணும். அதனால் தான் விழிப்புணர்வு ப்ரோக்ராம்கள் செய்துகொண்டிருக்கிறோம்.
உணவு மிக முக்கியம். கீரை, பழ வகைகள் சத்தாண உணவுகள் சாப்பிடணும். டயபடிக் பேஷண்ட்கள் சில பழ வகைகள் சாப்பிட முடியாது. அவங்களுக்கு ஒத்துக்கொள்ளும் உணவு வகைகளை சாப்பிடணும். கண்களுக்கு மேக்சிமம் ரெஸ்ட் குடுக்கணும். நவீன உலகத்துல பாருங்க 4 இல்லைன்னா 5 மணிநேரம் கூட தூங்காமல் வேலை செய்வது இருக்கு. கண்களுக்கு நல்ல தூக்கம் தேவை.
சூரிய ஒளியில் போகும்போது குவாலிட்டி தரமான கண்ணாடி அணிய வேண்டும். பேக்டரி இண்டஸ்ட்ரிகளில் ப்ரொடக்டிவ் பேக்டரி கண்ணாடி அணியணும்.
பிபி கொலஸ்ட்ரால். கிட்னி பிரச்சினை இருக்கிறவங்க முன்னெச்சரிக்கையா கண்களைப் பாதுகாக்கணும்.
எந்த பிரச்சினையா இருந்தாலும் ஒரு நாள் இரண்டு நாள் இருக்கலாம். ஆனால் ஐந்து நாட்களுக்கு மேல் வைத்து வியாதி அதிகமான பிறகு மருத்துவரிடம் போகக்கூடாது. இது தவறான விஷயம். உங்களின் அடுத்த கேள்வி இதாவும் இருக்கலாம். எந்த பிரச்சினை வந்தால் மருத்துவரைப் பார்க்கணும் என்பது :) நீங்க கேட்பதற்கு முன்னால் நானே சொல்லிடறேன். கண் நன்றாக சிவந்து போவது, கண்ணில் வலி சாதாரணவலியாய் இல்லாமல் பொறுக்க முடியாத அளவில் பயங்கர வலியாய் இருப்பது இப்படி இருந்தால் உடனே மருத்துவரைப் போய்ப் பார்க்கணும்.
நேத்து பார்த்த பார்வை இன்னிக்கு காலையில் எழுந்திருக்கும்போது இல்லை என்றால் ஒரு சடன் லாஸ் ஆப் விஷன் என்றால் உடனே மருத்துவரை சந்திக்கணும்.
நீங்க பார்க்கும்போது உங்க பார்வையில் கண்ணுக்கு முன்னாடி கறுப்பா பறப்பது போலிருக்கும். ப்ளோடஸ். கண்ணுக்கு ஓரத்தில் ஒரு ஒளி போல் இருக்கும். இதெல்லாம் எமர்ஜன்ஸி கேஸஸ். விழித்திரையில் பிரச்சினைகள் இருக்கலாம். இதெல்லாம் பேசிக்.
ஒரு சாலை விபத்து இல்லைன்னா பேக்டரி விபத்து இல்லைன்னா வீட்டுக்குள் அடுப்பங்கரையில் விபத்து இல்லைன்னா குழந்தைகள் விளையாடும்போது விபத்து என்று இருந்தால் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.
ஹார்ட் அட்டாக்கிற்கு கோலடன் அவர்னு எப்படி சொல்லறோமோ அதுபோல கண்களைப் பொறுத்த அளவில் இது ப்ளாட்டினம் அவர். கோல்டன் அவரை விட முக்கியமானது. உடனே கண் மருத்துவரை சந்திக்கணும்.

ரொம்ப தவறு. 1970 களில் மெட்ராஸ் ஐன்னு வந்தது. இன்னிக்கு இப்போ கோயமுத்தூர், மதுரை, வடநாட்டில் டில்லி, மும்பய், நு ஆயிடுச்சு. என்களைப் பொறுத்தவரையில் வைரல் இன்பெக்ஷன், பேக்டீரியல் இன்பெக்ஷனால் வருது. இது சிவியர் இன்பெக்ஷன். மெட்ராஸில் இதை கண்டுபிடிச்சதால மெட்ராஸ் ஐன்னு பெயர் வந்தது.
உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கணும். டிராப்ஸ் போட்டபின்பு கூட ஐந்தாவது நாளுக்குப் பிறகு ரத்தக் கசிவோடு வர்றவங்க இருக்கிறாங்க. இதனால் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை வருவது நல்லது. செல்ப் மெடிகேஷன் எந்த வியாதிக்கும் நல்லது கிடையாது இந்த வியாதி உட்பட.

இந்த போட்டோவைப் பாருங்க இதை உங்களுக்கு கொடுக்கறேன்
கம்ப்யூட்டர் மானிடர் எல்சிடியா இருக்கலாம் இல்லைன்னா எல்இடியா இருக்கலாம் பழைய மானிடரா இருக்கலாம். ஆனா கண்ணுக்கும் மானிடருக்கும் இடையேயான இடைவெளி 25 இஞ்ச் இருக்கணும். மானிடர் 15 டிகிரி இன்க்லைண்ட் பொசிஷனில் இருக்கணும். கண்ணு மேல இருக்கணும் மானிடர் கீழே இருக்கணும். இது பேசிக்.
கண்களுக்கு யாரா இருந்தாலும் காலையிலிருந்து இரவு வரை உபயோகிக்க வேண்டிய சூழல் இருக்கு. எந்தத் துறையானாலும் 8 மணிநேரம் என்று இல்லாமல் 15 மணி நேரம் உபயோகிக்க வேண்டியது இருக்கிறது. அதனால் 20 நிமிஷத்திலிருந்து 30 நிமிஷம் வரைக்கும் தொடர்ந்து உபயோகித்தால் ஒரு நிமிஷம் ஓய்வெடுத்து மானிடரைப் பார்க்காமல் திரும்பி வேறு எங்காவது தூரமாய்ப் பார்த்தால் கண்களுக்கு ஓய்வு கண்டிப்பா கிடைக்கும். அதுதவிர நாமே கண்களை பத்திலிருந்து 15 முறை சிமிட்டணும். சிமிட்டும்போதே கண்ணீர் உலர்ந்த கண்களை ஈரப்படுத்தும். இதை செய்துகொண்டே இருந்தால் சரியான ஓய்வு கிடைக்கும்.
அளவுக்கு மீறி உபயோகித்தால் கண்கள் பாதிக்கதான் செய்யும்.

பொதுவா நம்ம வீட்டில் பெண்கள் சமையல் மத்த வேலைகள் தவிர மீதி நேரங்களை எக்ஸ்ட்ராவாக எடுத்து அந்த நேரங்களில் சின்ன எண்டெர்டெயிண்மெண்ட்டாக கைவேலை, தையல், இவை செய்யும் போது ஒரே இடத்தில் கான்சண்ட்ரேஷன் பண்ணி செய்யும்போது, கண்களுக்கு தொந்தரவு இருக்கலாம். ஆனா பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஒரே இடத்தில் பார்க்கும்போது கண் சிமிட்டாது. கண் சிமிட்டாததால கண்ணில் நீர் பரவாது. இதை நாம முன்னாலயும் பேசியிருக்கிறோம். உன்னிப்பா செய்யும்போது, கண்களுக்கு கிட்டக்க வெச்சுக்காம கொஞ்சம் தூரத்தில் வைத்து பண்ணறது நல்லது. தொடர்ந்து மணிக்கணக்காக செய்யாமல், விட்டு விட்டு கேப் கொடுத்து பண்ணறது நல்லது. கண்ணுக்கு எந்த வேலை கொடுத்தாலும் அதிக நேரம் இல்லமல் குறைந்த நேரம் செய்யரது நல்லது. எம்ப்ராய்டரி பண்ணும்போது 40 வயசுக்கு கீழே இருக்கிறவங்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. 40 வயதுக்கு மேல் இருக்கிறவங்களுக்கு சாளேஸ்வரம், வெள்ளெழுத்துன்னு சொல்கிறோமில்லையா கண்ணாடி போட்டால்தான் ஊசியில் நூல் கோர்க்க முடியும். க்ளாரிட்டியும் நல்லா இருக்கும்.

இது ஒரு வியாதி கிடையாது. கண்பார்வை கோளாறு கிடையாது. வயசுக்கு ஏற்படும் பிரச்சினை 40 வயது ஆகும்போது அந்த லென்ஸ் முன்னுக்கும் பின்னுக்கும் அசைவு ஏற்படுவது ஸ்லோ ஆகும் போது இந்தப் பிரச்சினை ஏற்படும். ப்ளஸ் கண்ணாடி போடும்போது சுத்தமா படிக்க முடியும்.

லேசிக் லேசர் என்பது ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். எப்படின்னா ஹை பவர் கண்ணாடி போடறவங்களுக்கு காலையில் எழுந்ததும் கண்ணாடி போடவில்லையென்றால் பார்வை தெரியாது. அவங்களுக்கு லேசிக் லேசர் சிகிச்சை ங்கிறது வரப்பிரசாதம். லேசிக் லேசர்ங்கிறது என்னன்னா கண்ணாடியும் போட வேண்டிய அவசியம் இல்லை. காண்டாக்ட் லென்சும் போட வேண்டிய அவசியம் இல்லை. கண்ணாடி போடறவங்க முகம் அழகாகத் தெரியணும் என்பதற்காக காண்டாக்ட் லென்சுக்குப் போறாங்க. காண்டாக்ட் லென்ஸில் சில பாதுக்காப்பா வெச்சுக்கணும் என்பதற்காகவும், காண்டாக்ட் லென்ஸ் வைத்து முகம் அலம்பக் கூடாது, தூங்கக்கூடாது இது போன்ற சிக்கல்கள் இருப்பதால் அவங்களுக்கு மிகவும் நல்லது.

இது லேசிக் லேசரால் செய்யப்படும் அறுவை சிகிச்சை. கண் கருவிழியின் வடிவமைப்பை மாற்றி சீரமைப்பது. இது சின்ன ப்ரொசீஜர் தான். கண்டிப்பா 18 வயது தாண்டியவர்களுக்குதான் செய்யணும்.
கண்ணின் கரு அமைப்பு, கார்னியாவின் ஷேப் சரியா இருக்கணும். விழித்திரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கணும். இப்படி இது எல்லாம் இருந்தால் கண்டிப்பா லேசிக் லேசர் சிகிச்சை செய்யலாம்.
ஒரு கண்ணுக்கு இரண்டு நிமிடம் தான் ஆகும். ஒரு வாரம் கண்ணில் தண்ணீர் தூசு படாமல் இருந்தால் வாழ்நாள் முழுக்க பார்வை நன்றாக இருக்கும்.

கண்டிப்பா. கடந்த எட்டு வருடங்களாக இன்ஸ்யூரன்ஸ் பெரிய அளவில் மருத்துவ துறையில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுக்கு முன்னால் நடுத்தர மக்களுக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழிருக்கும் மக்களுக்கும் பெரிய சிறந்த அறுவை சிகிச்சை கிடைப்பது பொருளாதார பிரச்சினையால் சிரமமாக இருந்து வந்தது. அவங்களுக்கு அரசு மூலமாக இந்த இன்ஸ்யூரன்ஸ் நல்ல பலனைக்கொடுக்கிறது. தலை முதல் கால் வரை பல நோய்களின் சிகிச்சைக்கு நல்ல மருத்துவங்கள் கிடைக்கின்றன. அரசு இன்ஸ்யூரன்ஸ், பல தனியார் இன்ஸ்யூரன்ஸ் பல ஸ்கீம்கள் வைத்திருக்கிறாங்க. இதனால் மக்கள் சிறந்த பலனை அடையலாம்.
லேசிக் லேஸர் சிகிச்சை பத்தி பேசினோம். அது இந்த இன்ஸ்யூரன்சில் வராது. மற்ற கேடராக்ட், ரெடினா, கிளக்கோமா போன்றவை கண் பார்வை குறைபாடுகளுக்கான சிகிச்சை என்பதால் இதில் வரும். ஆனால் , கண்ணாடி போட்டாலும் பார்வை தெரியும் காண்டாக்ட் லென்ஸ் போட்டாலும் பார்வை தெரியும் எனும்போது லேசிக் லேசர் சிகிச்சை அழகுக்காக செய்யப்படுவதால் அதற்கு இன்ஸ்யூரன்ஸ் கிடையாது. பிற்காலத்தில் வரலாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது.

இது போன்ற பிரச்சினைகள் இருப்பதை மக்களுக்கு தெரிவிக்க முகாம்கள் நடத்தறோம். டயபடீஸ் காரங்களுக்கு கண்ணில் பிரச்சினை கண்டுபிடிக்க, கிளக்கோமா பிரச்சினை இருப்பதை அறிய கண் அழுத்த முகாம்கள், குழந்தைகளுக்கு பள்ளிகளுக்கு சென்று பார்க்கிறோம்.
ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுக்கிறோம். குழந்தைகள் கண்களை தேய்ச்சுகிட்டிருப்பாங்க. போர்டை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பினனாடி வரிசையில் இருந்தால் கண் தெரியவில்லை என்பார்கள். ஆசிரியர்கள் இதை பெற்றோரிடம் சொன்னால் மருத்துவரிடம் அழைத்து வருவாங்க. அதனால் பள்ளி, கல்லூரிகளில் கண் தானத்தைப் பற்றி மட்டுமில்லாமல் கண் பார்வையை எப்படி காப்பாத்தணும், கண்ணுக்கு வரும் வியாதிகள் என்னென்ன என்று சொல்லித் தருகிறோம்.

கல்வியை நான் குறை சொல்லல. வெஸ்டர்ன் நாடுகளில் தனியா சோசியல் கல்வின்னே இருக்கு. படிப்பு சம்பந்தமா சொல்லிக் கொடுத்துவிட்டு விழிப்புணர்வு தருவதற்கு நல்லது என்ன கெட்டது என்ன என்பதை சொல்லிக்கொடுப்பாங்க. அதுபோல் நம்ம கல்வித்துறைக்கும் வந்தால் நல்லது. இந்தத் துறையில் இருக்கிறவங்க அவங்களே முன்வந்தும் நல்லது செய்யலாம். படிப்பதை உபயோகிக்கணும். நம்ம வாழ்க்கை முறைக்கு பயன்படுத்திக்கணும்.

கடவுள் கொடுக்கற ஆசீர்வாதம். அதிகமான விருதுகள் கிடைத்திருக்கிறது. இந்த சூழலில் அதைப் பற்றிப்பேச விரும்பவில்லை. நம்ம பெருமையை நாமளே புகழா பேசிக்கக்கூடாது. ஒன்றை மட்டும் சொல்லறேன். எனக்கு ரீசண்ட்டா புது டெல்லியில் பாரத் ஜோதி விருது கிடைத்தது. முன்னாள் கவர்னரும் முன்னாள் கேபினட் மினிஸ்டருமான திரு. பீஷ்மநாராயண சிங் அவர்களும், முன்னாள் சீப் எலக்ஷன் கமிஷனர் ஜிவிஜி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் சேர்ந்து எனக்கு இந்த அவார்டை கொடுத்தாங்க. பெருமையா நினைக்கிறேன். பல பேப்பர் பிரஷண்டேஷன்ஸ் கண் பார்வை இழப்பை தடுப்பதற்காக கண் பார்வையை மேம்படுத்த கேடராக்ட் கிளக்கோமா ரெடினல் ப்ராப்ளம் பல பிரச்சினைகளை விளக்கி கொடுத்த உரைகளுக்கு, அதுக்கு ஏற்ற பெருமைகளும் விருதுகளும் கிடைச்சிருக்கு.

If you Have Any Questions Call Us On +91 98400 23438, +91 87545 71212